Aishwarya arjun marriage: பிரபல நடிகர் மகனுடன் அர்ஜுன் மகளுக்கு டும் டும் டும்..மாப்பிள்ளை யாரு தெரியுமா?
ஜெய்கிந்த், முதல்வன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.இவரது மகளும் நடிகையும் ஆனவர் ஐஸ்வர்யா அர்ஜுன்.
ஐஸ்வர்யா, 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.
ஐஸ்வர்யாவிற்கு பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும் தற்போது பெற்றோர்கள் சம்மததோடு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதலாக அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உமாபதி ராமையா கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.