Actor Jai : அறம் இயக்குநருடன் கைக்கோர்த்த நடிகர் ஜெய்..வெளியான கருப்பர் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அறம் திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்வின் அவதாரத்தை மாற்றியமைத்த படமாக அறம் திரைப்படம் அமைந்திருந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் பெண் குழந்தையை எப்படி மீட்டெடுக்கின்றனர் என்பதே படத்தின் கதை.
அறம் இயக்குநர் கோபி நயினார் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு “கருப்பர் நகரம்” என பெயர் வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டின் பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -