ARM Salman Khan : 10 வருடங்களுக்கு பின் பாலிவுட் பக்கம் செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!
தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என ஹிட் படங்களை கொடுத்தார்.
எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, பத்து என்றதுக்குள்ள, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களை இதுவரை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டு வரும் கான்களில் ஒருவரான சல்மான் கானுடன் கைகோர்க்கிறார்.
சல்மான் கானின் படங்கள் ஒவ்வொரு ரம்ஜான் பண்டிகையில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் ரம்ஜான் பண்டிகையில் ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான் கான் - சஜித் நதியத்வாலா காம்போவில் உருவாகும் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. ge 6
சிவகார்த்திகேயனின் எஸ்.கே 23 படத்தையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.