Anurag Kashyap : லியோ படத்தில் அனுராக் காஷ்யப்... இணையத்தில் பரவி வரும் புது தகவல் இதுதான் தெரியுமா?
இயக்கிய லோகேஷ் கனகராஜின் கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் லியோ.
படம் குறித்த தகவல் வந்த முதல் நாளில் இருந்து, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது இப்படக்குழு. படப்பிடிப்பு நடக்கும் இடம் ஆகியவற்றை பற்றிய தகவலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தை வட்டமடித்தது.
பின்னர் படக்குழுவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டது. அதன்படி, படத்தின் டைட்டில் வீடியோ, படத்தில் நடிக்கும் நபர்கள் குறித்த தகவல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல், நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியானது.
எக்கசக்கமான திரைப்பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் ஷூட் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு பட வரிசையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் குறிப்பாக ஒரு முக்கிய வில்லனாக இருந்து கடைசியில் கொடூரமாக மரணமடைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார் அனுராக்.
அனுராக் காஷ்யப் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.