Anurag Kashyap : ‘கொடூரமா சாகனும்..’ ஆழ் மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்திய அனுராக் கஷ்யப்!
தமிழ் சினிமா ரசிகர்கள், இயக்குநர்கள், நடிகர்களை தனக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது? என்று மனம் திறந்துள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதென் இந்திய சினிமாக்களை தொடர்ந்து பாராட்டி வருபவர் இயக்குநர் அனுராக் கஷ்யப். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தேவ் டி, அக்லி, ஆகிய படங்களின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்படுபவர் அனுராக்.
அதே நேரத்தில் ஒரு பாலிவுட் இயக்குநராக இருந்துகொண்டு பாலிவுட் சினிமாக்களை தொடர்ந்து விமர்சித்து வருபவரும் அனுராக். இந்திய சினிமா இயக்குநர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தென் இந்திய சினிமா தனக்கு ஏன் பிடித்தமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அனுராக் கஷ்யப்.
தென் இந்திய சினிமா குறித்து பேசிய அனுராக் கஷ்யப் “கேரளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கலாச்சார ரீதியாக முன் நகர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. அவர்களில் இருந்து இயக்குநராக உருவாகும் ஒருவர் இந்த மண்ணுக்கான கதைகளை இயக்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நான் அண்மையில்தான் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தின் டீஸரை பார்த்தேன். அந்த மாதிரியான காட்சிகளை நான் இந்தி திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்தி திரைப்படங்கள் ஒரு காலத்தில் தங்களது நிலத்திற்கான கதைகளை கொண்டிருந்தன ஆனால் அதற்கு பின் அவை ஹாலிவுட் நோக்கி நகர்ந்துவிட்டன. நான் இந்திப் படங்களைக்கூட பார்க்காமல் தவிர்த்துவிடுவேன். ஆனால் நான் தங்கலான் மாதிரியான படங்களை பார்ப்பதற்கு தவறுவததில்லை” என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு பட வரிசையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் குறிப்பாக ஒரு முக்கிய வில்லனாக இருந்து கடைசியில் கொடூரமாக மரணமடைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார் அனுராக்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -