Anirudh Tweet : இந்த முறையும் சரவெடிதான்..ட்வீட் பதிவிட்டு பச்சை கொடி காட்டிய அனிருத்!
தனுஷின் 3 படத்திற்கு இசையமைத்து தனது இசை பயணத்தை தொடங்கியவர் அனிருத்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரின் இசையை சிலர் ட்ரால் செய்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.
சினிமாவை தாண்டி, ஆல்பம் பாடல்களை இசையமைத்து வருகிறார். அத்துடன் இசை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார் அனிருத்.
‘போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு..’ என்ற அளவுக்கு பெரிய லைன்-அப், அனிருத்தின் கைவசத்தில் உள்ளது.
சமீப காலங்களில் வெளியான ஜெயிலர், ஜவான் ஆகிய படங்கள் வெளியாவதற்கு முன்பாக அனிருத், தான் இசையமைத்த படங்களை ப்ரோமோஷன் செய்வதற்காக ட்வீட் செய்து இருந்தார். அதற்கு ஏற்றவாரு அந்த படங்களும் செம ஹிட்டாகி கோடிக்கணக்கான வசூலை குவித்தது. தற்போது, லியோவிற்கும் இமோஜிகளை தெறிக்கவிட்டுள்ளார் அனி.
இந்த ஒரு ட்வீட்டால், லியோ மீது இருக்கும் எதிர்ப்பார்ப்புகளுடன் பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -