Radhika Merchant : லைட்டா பொறாமையா இருக்கு...ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருக்கும் ஜீன்ஸ் விலை என்ன தெரியுமா?
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருமணத்திற்கு முன்பும் பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் உள்ள செல்வந்தர்கள் , திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். மொத்த திருமணத்திற்கும் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.
அம்பானி குடும்பத்தைப் பற்றி பலர் அறிந்து வைத்திருந்தாலும் ராதிகா மெர்ச்சண்ட் பற்றி குறைவாகவே பலருக்கு தெரிந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரான விரேன் மெர்ச்சண்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட் . இவரது தந்தையின் மொத்த சொத்து மதிப்பு ரூ 750 கோடியாகும். இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ராதிகா
சமீபத்தில் மும்பையில் பிரபல பாப் பாடகி துவா லிபாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் தனது கணவர் ஆனந்த் அம்பானியுடன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு ராதிகா மெர்ச்சன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதன் விலையைக் கேட்ட பலர் அதிர்ச்சியில் வாய்பிளந்துள்ளார்கள்
சாண்ட்ரா என்கிற பிராண்டிற்கு சொந்தமான இந்த ஜீன்ஸ் பேண்டின் விலை 26 ஆயிரத்து 500 ரூபாயாம். இந்த தகவலை கேட்ட பலர் அதுதான் எங்கள் ஒரு மாதம் சம்பளமே என்று புலம்பி வருகிறார்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -