Amala Paul: அமலா பால் மகனுக்கு குடும்ப முறைப்படி நடந்த ஞானஸ்நானம் நிகழ்வு - வைரலாகும் போட்டோஸ்!
சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான அமலா பால், இந்த படத்தை தொடர்ந்து நடித்த மையா இவரது கேரியரை தூக்கி விட்டது.
பின்னர் மிக குறுகிய காலத்தில், தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார். தமிழில் மட்டும் இன்றி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், தன்னை வைத்து, 'தெய்வ திருமகள்', 'தலைவா' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் 4 வருடத்தில் முடிவுக்கு வர, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். ஆனால் இவர் நடித்த படங்கள் எடுத்தும் இவருக்கு கை கொடுக்காத நிலையில்... கடந்த 2023ஆம் ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த அமலா பாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு இலை என்று பெயர் சூட்டினார். குழந்தை பிறந்த பிறகும், நடிப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அமலா பால் தன்னுடைய மகன் இலைக்கு நடந்த ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி குறித்த சில புகைபடங்கை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு, வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.