✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Amala Paul: 17 வயசுல அமலா பால் செய்த தவறு! தலைகுனிந்த தந்தை.. காரணம் அந்த இயக்குனர் - அமலாபால் வேதனை!

மணிகண்டன்   |  07 Apr 2025 07:37 PM (IST)
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஆர்யா, விக்ரம், ரவி மோகன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

2

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வந்துவிட்டார்.

3

திருமண விவாகரத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த அமலா பாலிற்கு போதுமான சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஹீரோயினுக்கான கதைகளை தேர்வு செய்து நடித்தும் பெரியளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

4

இந்த நிலையில் தான் குஜராத்தைச் சேர்ந்த, ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஜோடிக்கு கடத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

5

இந்த நிலையில் தான் சினிமாவில் தன்னுடைய 17 வயதில் செய்த தவறு குறித்து அமலா பால் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது குறித்து அமலா பால் கூறியிருப்பதாவது: சிந்து சமவெளி படத்தில் நடித்த போது என்னைவிட என்னுடைய அப்பா ரொம்பவே வருத்தப்பட்டார். மேலும், உற்றார், உறவினர்கள் என்று பலரும் பலவிதமாக பேசினார்கள்.

6

அந்தப் படத்தில் நடித்த போது எனக்கு வயது 17. அந்தப் படத்திற்கு பிறகு நான் கேரளாவிலிருந்து சென்னை வரவே யோசித்தேன். அந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் தான் காரணம். அவர் தான் கட்டாயப்படுத்தினார். இந்தப் படம் என்னுடைய சினிமா வாழ்க்கையையும் பாதித்தது. இதனால், மைனா பட புரோமோஷனுக்கு கூட என்னால் வெளியில் செல்ல முடியவில்லை. படக்குழுவினரும் என்னை அழைக்கவில்லை.

7

காரணம், நான் வெளியில் வந்தால் சிந்து சமவெளி படம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதாலும், இதனால் மைனா பட புரோமோஷனும் பாதிக்கப்படும் என்பதாலும் படக்குழுவினர் என்னை அழைக்கவில்லை.

8

மைனா படம் வெளியான பிறகு தான் என் மீதான விமர்சனம் நீங்கியது. இந்தப் படத்திற்கு பிறகு தான் நான் விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் நடித்தேன். இப்படி பல படங்களில் நடித்த பிறகு தான் சினிமா என்றால் என்ன என்பது தெரிந்தது. சினிமா என்பது ஒரு வியாபாரம் என்பதை நான் புரிந்து கொண்டேன். சினிமாவிற்காக ஒரு நடிகையை எப்படி வேண்டுமானாலும் காட்டுவார்கள் என்பது எனக்கு புரிந்தது என்று அமலா பால் கூறியிருக்கிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Amala Paul: 17 வயசுல அமலா பால் செய்த தவறு! தலைகுனிந்த தந்தை.. காரணம் அந்த இயக்குனர் - அமலாபால் வேதனை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.