Allu Arjun : அர்ஜூன் ரெட்டி இயக்குநர் உடன் இணையும் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன்!
டோலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களுள் அல்லு அர்ஜூனும் ஒருவர். இவரும் ராம் சரணும் நெருங்கிய உறவினர் ஆவர்.
2021 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்த புஷ்பா (பாகம் 1) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் செம வைரலானது.
முதல் பாகத்தின் தொடர்கதை, இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது. இப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
தற்போது, அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோருடன் இணைந்து அல்லு அர்ஜூன் படம் நடிக்கவுள்ளார்.
இன்று காலையில் இருந்து, அல்லு அர்ஜூன் என்ற ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் சந்தீப் வங்காவின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது.
நெட்டிசன்கள் வழக்கம் போல், புதிய தகவலை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.