Allu Arjun : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அல்லு அர்ஜுன்.. மகிழ்ச்சியில் டோலிவுட் ரசிகர்கள்!
தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் அல்லு அர்ஜுனும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2003ல் வெளியான கங்கோத்ரி படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆரம்ப காலகட்டத்தில் ட்ரால் செய்யப்பட்டாலும் போக போக இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. 2021ல் சுகுமாறன் இயக்கத்தில் புஷ்ப ராஜாக நடித்து, பான் இந்திய ஸ்டாராக ஜொலித்தார்.
முதல் பாகத்தின் தொடர்கதையாக உருவாகும் புஷ்பா 2 தி ரூல் படத்தின் ஷூட்டில் பிசியாக உள்ளார்.
2020ல் வெளியான அல வைகுந்தபுரமுலோ படத்தின் இயக்குநரான திரிவிக்ரமுடன் மீண்டும் இணையவுள்ளார் அல்லு அர்ஜூன். இப்படத்தில் இடம்பெற்ற புட்டா பொம்ம, ராமுலோ ராமுலா பாடலையும் பூஜா ஹெக்டேவின் க்யூட் எக்ஸ்பிரஷனையும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் நடனத்தையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
தற்போது அதே கூட்டணி இணையும் தகவல், டோலிவுட் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிட்ட உணர்வை கொடுத்திருக்கும்.
முன்னதாக அல்லு அர்ஜுனின் 23வது படத்தை அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார் என்ற தகவல் வந்தது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -