64 Years Of Kamal : களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை.. 64வது ஆண்டில் கால் எடுத்து வைத்த கமல் ஹாசன்!
நடிகர் கமலஹாசன் களத்துர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருதையும் பெற்றார்.
நடிகர் கமல் 1974ல் வெளியான கன்னியாகுமாரி என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதில் இருந்து கமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெரும் நடிகராக இன்று வரை வலம் வருகிறார்.
நடிப்பை தாண்டி திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக உள்ளார் கமல்.
தற்போது வரை அவரின் படங்களுக்கு வரவேற்பு குறையவில்லை அவரின் நடிப்பில் தோய்வும் ஏற்படவில்லை. நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்து வரும் கமல் ஹாசன், இன்று தனது சினிமா வாழ்க்கையின் 64வது வருடத்தில் கால் எடுத்து வைக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -