அஜித் குமாரின் மகன் சென்னையின் எப் சி அணியில் விளையாடி வருகிறார்.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களைக் கடந்து பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார் உதாரணமாக பைக் ரேஸ், டிராவல், துப்பாக்கி சுடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
அஜித் குமாரின் மகன் சென்னையின் எப் சி அணியில் விளையாடி வருகிறார். நடிகர் அஜித் தனது மகனின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார்.
அஜித் குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதால் ஆத்விக்கை சென்னையின் எப் சி ஜூனியர் அணியில் சேர்த்ததால், தற்போது விளையாடி வருகிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியில் விளையாடிய ஆத்விக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தை வென்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பரவிவருகிறது.
ஆத்விக்குடன் நடிகையும் அவரின் அம்மாவுமான ஷாலினியும் உறுதுணையாக நிற்கும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் .
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனிபடத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் பணிக்காக நடிகர் அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார். அதிர்ச்சியில் கலங்கிய படக்குழு படத்தின் ஷூட்டிங் பணிகளை தற்போது நிறுத்தியுள்ளது.படத்திற்கு விடா முயற்சி என பெயரிடப்பட்டுள்ளது .இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத் ,ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.