Anoushka Ajith: அப்படியே அம்மா Xerox அசரடிக்கும் அழகு! ஷாலினியுடன் திருமணத்திற்கு வந்த அஜித் மகள் அனோஷ்கா!
அஜித் பல வருடங்கள் தன்னுடைய பிள்ளைகளை கேமரா முன் காட்டாமல் வளர்த்து வந்த நிலையில், சமீப காலமாக ஷாலினியுடன் சேர்ந்து அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வளவு ஏன், அஜித்தின் அனுமதியோடு ஷாலினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது தன்னுடைய பிள்ளைகளுடன், பிரபலங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில், கணவரின் சார்பாக, ஷாலினி தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் கலந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது, நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமும் திருமணம் டிசம்பர் 8-ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்த நிலையில், திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கிருத்திகா உதயநிதி உட்பட பல பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில், அஜித்தின் மனைவி ஷாலினியும் தன்னுடைய பிள்ளைகளுடன் கலந்து கொண்டார். இதில் அஜித்தின் மகள் அனோஷ்கா அழகிய லெஹங்கா உடையில் அப்படியே அம்மாவின் Xerox போல் வந்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.