Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்பும் நடைப்பெற்றது.
“லால் சலாம் படத்தின் கதை என்னவென்று பார்த்தால் ஒரு ஊரில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினை வெடிக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது.”என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார்.
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை பார்த்து நீங்க ரொம்ப நல்ல நடிகர். இந்த படம் வெளியானதற்கு பிறகு உங்க லைஃப் மாறிடும் என்று சொன்னதாக விக்ராந்த் தெரிவித்தார். இவ்வளவு பெரிய நடிகர் தன்னைப் பார்த்து அப்படி சொன்னது தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்ததாக விக்ராந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. தியேட்டர்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகிறது.