Aishwarya rajesh : ‘ ஸ்ரீவள்ளியாக நான் நன்றாக நடித்திருப்பேன்..’ சும்மா இருந்த ராஷ்மிகாவை சீண்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
கோலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ள தன் ஃபர்ஹானா படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.
“எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை.” என பேசினார்.
மேலும் பேசிய ஐஸ்வர்யா, “புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருந்தார். ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன் என்ற அவரது கருத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -