AGS Production : வரிசைக்கட்டும் திரைப்படங்கள்..இனி ஏ.ஜி.எஸ் காட்டில் மழைதான்!
2006 ஆம் ஆண்டிலிருந்து பல படங்களை தயாரித்து வரும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு பெரும் கம்-பேக்காக அமைந்தது லவ் டுடே படம்.
அதனை தொடர்ந்து, தளபதி 68 குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஏ.ஜி.எஸ். வெங்கட் பிரபு - விஜய் -யுவன் காம்போவில் உருவாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், தயாரிப்பு பணிகளுக்காக வெங்கட் பிரபுவும், விஜய்யும் லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர்.
தளபதி 68 ஷாக்கிலிருந்து மீண்டு வருவதற்குள் தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பு வந்தது. தனி ஒருவன் படத்தின் முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவான போது இந்த அறிவிப்பு வந்தது. “என்னுடைய 11வது படத்திற்கு, ஏ.ஜி.எஸ் உடன் இணைவது இது மூன்றாவது முறை. நயனுடன் இணைவது இது நான்காவது முறை, ஆருயிர் ஜெயம் ரவியுடன் இணைவது இது ஏழாவது முறை” என இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டு இருந்தார்.
ஏ.ஜி.எஸ் காட்டில் அடை மழை பெய்து வரும் சமயத்தில், இன்று மற்றொரு பட அறிவிப்பு வரும் என அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்று மதியம் “கான்ஜூரிங் கண்ணப்பன்” என்ற பேய் படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.