6 Years of Meyaadha Maan: மேயாத மான் திரைப்படம் வெளியாகி6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
மேயாத மான் ,ஆடை ,குளுகுளு உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பதிவு செய்திருக்கும் இயக்குனர் ரத்னகுமாரின் மேயாத மான் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை கடந்து
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதற்போது 6ஆம் ஆண்டில் காவியமாக நிற்கிறது. குறும்படங்களை இயக்கி வாய்ப்புகளுக்காக பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு நடந்த ரத்தன குமாரை அழைத்து ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பு வழங்கியது
தனது முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இயக்குனர் ரத்ன குமார் மேயாத மான் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றார்.
மேயாத மான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.அடுத்து அவர் இயக்கி வெளிவந்த ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஆடை படம் அமலா பால் சினிமா வாழ்க்கையில்மைல்கல்லாக மைந்திருந்தது. அடுத்து மாஸ்டர் படத்திற்கு வசன கருத்தாவாகவும் பணியாற்றினார். பிறகு சந்தானத்தை வைத்து குளுகுளு என்ற படத்தை இயக்கினார்.
எதிர்பார்த்த வெற்றியை குளுகுளு படம் தரவில்லை என்ற போதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தின் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார். விக்ரம் வெற்றியை தொடர்ந்து லியோ படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேயாத மான் படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையெடுத்து இயக்குனர் ரத்தன குமார் மேயாத மான் திரைப்படத்தின் போஸ்ட்டரை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -