Aditi Shankar Marriage : அதிதி ஷங்கருக்கு திருமணமா? ஷங்கர் தன் மகளுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கர்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அதிதி சங்கர்.
அதன் பின் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் அதிதி.
அடுத்ததாக விஷ்ணு வர்ஷன் இயக்கும் ஒரு படத்திலும் அதிதி நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் அதிதிக்கு ஜோடியாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராஜ்குமார் உள்ள புதிய திரைப்படத்தில் விஷ்னு விஷால் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி.
இவ்வாறு பிஸியாக வலம் வரும் நடிகை அதிதி சங்கரின் தந்தையான இயக்குநர் சங்கர் ஸ்ட்ரிக்டான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். அதிதி, இரண்டு ஆண்டுகளுக்குள் நடித்து ஆசையை தீர்த்து கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.
தந்தையின் இந்த கண்டிஷனால் இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னால் முடிந்த திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆவலில் உள்ளாராம் அதிதி.