Samantha : அமெரிக்காவில் அட்மிட் ஆன நடிகை சமந்தா!
தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையும் தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் கட்டிப் போட்டுள்ள நடிகை சமந்தா.
இவர் சமீப காலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் முழுமையாக குணமடையவில்லை.
இருப்பினும் அவர் பாதியில் விட்டு வந்த குஷி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து படத்தில் நடித்து முடித்துவிட்டார்
இதனை முடித்த பின் சமந்தா அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகை சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
முதல் கட்டமாக ஜஸ்பாத் தெரபி அவருக்கு தரப்படுகிறது. அத்துடன் தசை பிடிப்பு நீக்குவதற்கான சிகிச்சையும் தாரப்பட உள்ளதாம். அத்துடன் தசை பிடிப்பு நீக்குவதற்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.