சிட்னியில் அழகான பொழுதுகள்..பிரியா பவானி சங்கர் பகிர்ந்த லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு வருகைத் தந்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து முதலில் ரசிகர்களை ஈர்த்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார். கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர், கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், திருசிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம், பத்து தல திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
தனது கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேலு என்கிறவரை காதலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இதை அவர் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இருவரும் ஆஸ்திரேயிலாவில் உள்ள சிட்னியில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்துள்ளார். புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
சிட்னிக்கு சென்றுள்ளது பற்றி அவர் கேப்சனின் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது ஹோம் சிட்னி. ஆனால், இம்முறை வந்தபோதுதான் அதன் அழகை முழுமையாக பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான நகரில் அழகான மெமரிக்களை உருவாக்கியது மகிழ்ச்சியா இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.