Actress Parvathy | மரியான் நாயகி பார்வதியின் ஸ்டைலான போட்டோஷூட்
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 1988-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பிரபல நடிகை பார்வதி
விஸ்வநாதன் என்பவர் இயக்கத்தில் வெளியான Out of Syllabus என்ற மலையாள படத்தின் மூலம் கடந்த 2006-ஆம் ஆண்டு பார்வதி திரையுலகில் அறிமுகமானார்.
பார்வதி மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசி இயக்கத்தில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான பூ என்ற திரைப்படத்தின் மூலம்தான் நடிகை பார்வதி தமிழில் அறிமுகமானார்.
2013-ஆம் ஆண்டு பரத் பாலா இயக்கத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் பார்வதிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் நவரசா என்ற இணைய தொடரிலும் பார்வதி நடித்துள்ளார்.
தமிழில் பார்வதி அறிமுகமான முதல் திரைப்படமான பூ படத்திற்காக இரண்டு விருதுகளை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.