Parvathy Thiruvothu: தங்கலான் படத்தில் மிரட்டிய கங்கம்மா- நடிகை பார்வதியின் சமீபத்திய க்ளிக்ஸ்!
ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், புத்திசாலித்தனம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தென்னிந்தியா தாண்டியும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
1988ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிறந்த பார்வதி, முதன்முதலில் தன் திரைப் பயணத்தைத் தொடங்கியது சின்னத்திரையில். டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, 2006ஆம் ஆண்டு ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பின்னர் கன்னட திரைப்படமான மிலானா மூலம் ஹீரோயினாக முதன்முதலில் களமிறங்கிய பார்வதி, 2008ஆம் ஆண்டு இயக்குநர் சசியின் ’பூ’ படத்தின் மூலம் மாரி எனும் கிராமியப் பெண்ணாக நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் தொடங்கி சினிமா ஜாம்பவான்கள் வரை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
மரியான், அதனைத் தொடர்ந்து பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல கதாபாத்திரங்களையும் அனைத்து மொழிகளிலும் தன் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் பார்வதி நடித்துள்ளார்.
இவர் தங்கலான் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்.