Parineeti chopra : நாடாளுமன்ற உறுப்பினருடன் கை கோர்த்த நடிகை பரினீதி சோப்ரா! யார் அந்த புது மாப்பிள்ளை?
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளுள் ஒருவர் பரினீதி சோப்ரா. இவர் சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ராகவ் சத்தாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது.
சமீப காலமாக பரினீதி-ராகவ் ஜோடி விரைவில் கைக்கோர்க்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று பரினீதி-ராகவ் ஜோடிக்கு டெல்லியில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
பிரமாண்டமாக நடைப்பெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பரினீதி சோப்ரா, பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -