Nayanthara Instagram : 'நா வந்துட்டேன்னு சொல்லு...' - இன்ஸ்டாவில் என்ட்ரி கொடுத்த நயன் விஜய்யின் சாதனையை முறியடிப்பாரா?
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிகர் சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைதொடர்ந்து, அடுத்தடுத்து வெளியான படங்களில் இவரின் நடிப்பால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.
அதையடுத்து, இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
முன்பெல்லாம் இவரின் புகைப்படங்கள், இயக்குநர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பக்கத்தில்தான் வெளியாகும். இனி விக்கியின் போஸ்டிற்காக காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் நயன், அவருக்கான தனி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். அத்துடன், “ஹுக்கும்” பாடலுக்கு ரீல்ஸ் செய்து “நான் வந்துடேன்னு சொல்லு” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு விக்கி, “ இன்ஸ்டாவிற்கு என் உயிர்களை வரவேற்கிறேன்.” இந்த கணக்கிலேயே நயன் மற்றும் அவரின் குடும்ப புகைப்படங்களும் வெளியாகும். உயிர் ருத்ரோனில் - உலக் தெய்வீக்கின் முகங்களை முதல் முறையாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார் நயன்.
மேலும் எக்ஸ் தளத்தில் நயன்தாரா என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக, நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய உடனே ஃபாலோவர்ஸ்களின் எண்ணிக்கை சரசரவென்று எகிறியது. இந்த சாதனையை நடிகை நயன்தாரா முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.