Meena 40 : ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா..’நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்த நடிகை மீனா!
4 வயதிலிருந்தே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த மீனா பல உச்ச நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார். தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சமீபத்தில் இவருடைய கணவர் நுரையீரல் தொற்றல் பாதிக்க பட்டு இறந்தார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது
தற்போது மீனா, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், ஒரு தனியார் நிறுவனம் மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல சினிமா பிரபலங்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து விழாவை சிறப்பித்தார்
இது மற்றும்மன்றி மீனாவுடன் நடித்த சககால நடிகர் நடிகைகள் வந்து மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து,தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர்
மீனாவை தொடர்ந்து அவருடைய குழந்தையும் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் வந்த தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது