Keerthy Suresh : திரையுலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவு..மனமுருகி நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் 80களில் பிரபலமான நடிகையான மேனகாவின் மகளும் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி, 2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமான கீர்த்தி, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலம் அதிகளவில் பாராட்டுகளையும் தேசிய விருதையும் பெற்றார்.
இந்நிலையில் நேற்றோடு கீர்த்தி சுரேஷ், திரையுலகில் கால் பதித்தி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து பெற்றோர்கள் முதல் ட்ரோலர்ஸ் வரை அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -