Kashmira Pardesi | சிவப்பு மஞ்சள் பச்சை நாயகி காஷ்மீரா பர்தேசியின் அசத்தல் புகைப்படங்கள்
மராத்திய மொழியை தனது தாய்மொழியாக கொண்ட நடிகை காஷ்மீரா பர்தேசி புனேவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
பிரபல நடிகை காஷ்மீரா பர்தேசி மும்பை நகரில் உள்ள கல்லுரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிக்க வருவதற்கு முன்பு பிரபல நடிகை காஷ்மீரா பர்தேசி சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி என்பவற்றின் இயக்கத்தில் வெளியான நர்தனசாலா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் கடந்த 2018ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் காஷ்மீரா
ஜெகன் சக்தி இயக்கத்தில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளியான மிஷன் மங்கல்யான் படத்தில் காஷ்மீரா நடித்துள்ளார். அதுவே அவரது முதல் பாலிவுட் படம்.
சசி இயக்கத்தில் பிரபல நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை தான் இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம்.
நடிக்க வந்த கடந்த 3 ஆண்டுகளில் காஷ்மீரா தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய 3 மொழிகளில் 4 படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் அன்பறிவு மற்றும் வசந்த முல்லை ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.