Devayani: சூரியவம்சம் படத்துல வருவது போல என் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிடுச்சு! தேவயானி உருக்கம்!
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரை தெரியாத 90ஸ் கிட்சே இருக்க முடியாது. ஏன் என்றால் இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேவயானி, பெங்காலி மொழியின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானாலும், அதன் பிறகு மலையாளத்தில் நடித்தார்.
மலையாள சினிமா தான் தேவயானியை தமிழுக்கு கொண்டு வந்தது. அப்படி அவர் தமிழில் நடிச்ச முதல் படம் தான் தொட்டாசிணுங்கி. அதன் பிறகு கல்லூரி வாசல், காதல் கோட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு தமிழ்நாடு மாநில விருது உட்பட பல பெற்றுக் கொடுத்தது.
இளைஞர்களுக்கு காதல் மீதான நம்பிக்கையை கொடுத்த படம் 'காதல் கோட்டை'. பார்க்காத காதலுக்கு, பிள்ளையார் சுழி போட்டு, அந்த படத்தை ஹிட்டடிக்கவும் செய்தார் இயக்குநர் அகத்தியன். அஜித் குமார், தேவயானி, ஹீரா, கரண், மணிவண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கிடைக்கவில்லை.
இந்தப் படத்துக்கு பிறகு தான் சரத்குமாரின் சூர்யவம்சம் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஒரு கார் 10 கார் ஆன மாதிரி, படிச்சு, தேர்வு எழுதி கலெக்டராகி வருவது எல்லாமே ஒரே பாடலில் நடக்கும். தேவயானிக்கு அதிக நாட்கள் ஓடிய படங்களில் இந்தப் படமும் ஒன்று. படம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு இந்தப் படம் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
மேலும் என் புருஷன் குழந்தை மாதிரி, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன், அழகி, நீ வருவாய் என என்று தொடர்ந்து ஹிட் படமாகவே நடித்தார். ஒரு ஆண்டில் 5க்கும் அதிகமான படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ரம்யா கிஷ்ணன், மீனா, குஷ்பு, ஜோதிகா ஆகியோருக்கு டப் கொடுக்கும் நடிகையாக ஜொலித்தார்.
அஜித், விஜய், கார்த்திக், பிரபு, விஜயகாந்த், கமல் ஹாசன், சரத்குமார், சத்யராஜ், விக்ரம், பார்த்திபன், லிவிங்ஸ்டன், மம்மூட்டி என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் யாருடன் எல்லாம் நடித்தாரோ அவர்கள் எல்லாம் இப்போதும் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருக்கின்றனர். சீசனுக்கு ஏதேனும் படங்களில் தலைகாட்டுகிறார்கள்.
கடந்த 1993 ஆம் ஆண்டு ஆரம்பித்து இப்போது வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் தேவயானி. தற்போது அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜெனி (Genie) என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்து ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர் சீரிஸ் எது என்றால் அது கோலங்கள் தான். 2003 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகள் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்படி அந்த தொடருக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
கோலங்களுக்கு பிறகு மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள் என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். சில ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் வந்துள்ளார். நீ வருவாய் என படத்தின் மூலமாக இயக்குநர் ராஜகுமரனை காதலித்து கரம் பிடித்தார். இப்போது அவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.
தனது கணவருடன் இணைந்து காதலுடன் என்ற படத்தை தயாரிக்க, இந்தப் படம் கொடுத்த தோல்வியால் தேவயானிக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்தார். அதன் பிறகு தான் சீரியல்களில் நடிக்க சென்றார். சீரியல்கள் கொடுத்த வரவேற்புக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.
இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் எப்படி சினிமாவில் ஒரு பாட்டுல வாழ்க்கை மாறுதோ அது போலத்தான் எனக்கும் நடந்தது காதல் கோட்டை என்ற படம் தான் ஓவர் நைட்டுல என்னோட வாழ்க்கையவே மாத்திடுச்சு என்று உருக்கமாக பேசியுள்ளார்.