Aparna Balamurali: நயன்தாரா, த்ரிஷா, சமந்தா லிஸ்டுலையே இல்ல ஏன்? போர்ப்ஸ்யில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை இவங்க தான்!
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய பிரபலங்களின் பட்டியலை நியூயார்க்கின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான 30 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், 30 வயதுக்கு கீழ் பொழுதுபோக்கு பிரிவில் இடம் பெற்றவர்களில் நடிகை அபர்ணா பாலமுரளி மட்டும் இடம் பிடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராயன், மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் மற்றும் ருத்ரம் ஆகிய படங்களில் ஆழமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ராயன் படத்தை விட கிஷ்கிந்தா காண்டம் படம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திய படம். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி, தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப் போற்று, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வந்த சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்தது. அதே போல் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக வீட்டுல விசேஷம் படத்திலும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
இந்த பத்திரிகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா ஆகியோர் போர்ப்ஸ் வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம் பெறாததன் காரணம் அவர்களின் வயது தான். நயன், த்ரிஷா, சமந்தா ஆகிய மூவருமே 30 மற்றும் 40 வயதை எட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -