Amy Jackson New house : லண்டனில் சொகுசு பங்களாவை வாங்கிய எமி ஜாக்சன்!
நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமாகி அதையடுத்து ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் முதலில் தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து கடந்த 2019ல் நிச்சயம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகின்றார். இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து லண்டன் அருகில் உள்ள கிராமத்தில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் எமி.
இப்பங்களாவை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கி, மூன்று மாதங்களில் மறுசீரமைப்பு செய்துள்ளனர். தற்போது, ‘நாங்கள் இருவரும் குடியேற எங்கள் வீடு தயாராகவுள்ளது.’என நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.