Aishwarya Rajesh: ‘எனக்கு நடிக்க வாய்ப்பே தரமாட்டேங்குறாங்க..’ புலம்பி தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ் திரையுலகில் காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.
சென்னையில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதன் காரணம் குறித்து கேட்ட போது “காக்கமுட்டை பார்த்துவிட்டு பலரும் என்னை பாராட்டினார்கள் ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் எனக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை” என்று கூறினார்.
மேலும், “என்ன தான் காக்காமுட்டை திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் அதன் பிறகு ஒன்றரை வருடம் வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில் சும்மா தான் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
“இவ்வாறு முன்னணி நடிகர்கள் யாரும் தனக்கு வாய்ப்பு தராததால் தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருவதாக” கூறினார்.
கூடுதலாக ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை 15க்கும் மேற்பட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -