Yash Toxic Movie : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் நடிகர் யஷ்.. என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த களவாணி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களின் கன்னட வெர்ஷனில் நடித்து வந்தவர் யஷ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த இவருக்கு, கே.சி.எஃப் என்ற ஒற்றை படம் மைல் கல்லாக அமைந்தது. முதல் பாகத்தை மிஞ்சும் அளவில், அதன் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பியது.
யஷ்ஷின் நடிகர்கள் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டிற்காக காத்திருந்த போது, மற்றொரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியானது
நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு கதாநாயகியாக நடித்திருந்த கீதா மோகன்தாஸ் யஷ்ஷை வைத்து டாக்ஸிக் என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.
இந்த டாக்ஸிக் படத்தின் டீசர் நான்கு மாதத்திற்கு முன்பு வெளியானது. அதன் பிறகு படக்குழு சார்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இதே நாளில் அடுத்த ஆண்டு டாக்ஸிக் படம் வெளியாகும் என்பதை நினைவூட்டும் வகையில், சினிமா ரசிகர்கள் யஷ்ஷை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் இந்த படம், அதிக வசூலை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -