HBD Vikram : இந்திய திரையுலகின் ஒரே சியான்... விக்ரமின் பிறந்தநாள் இன்று!
ABP NADU | 17 Apr 2023 12:40 PM (IST)
1
1966 ஏப்ரல் 17 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த ஜான் கென்னடி விக்டருக்கு, விக்ரம் என்ற மேடை பெயர் சூட்டப்பட்டது.
2
1990 ஆம் ஆண்டு டி.எல்.ஜோய் இயக்கத்தில் வெளியான 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
3
பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான‘மீரா’படம் ஃப்ளாப் ஆனது. அதன் பின் இவரின் அடுத்தடுத்த படங்களும் தோல்வியை சந்தித்தது.
4
1999 டிசம்பரில் பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’படம், இவருக்கு சியான் என்ற பட்டத்தை பெற்று தந்தது.
5
பின்பு இவர் நடித்த பிதாமகன், விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.
6
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் மெனக்கெட்டு, உடல் எடையை கூட்டி, குறைத்து, உடல் மொழியை மாற்றி நடித்து வருகிறார். இதற்கு சாமி, அந்நியன், ஐ ஆகிய படங்களே சிறந்த எடுத்துக்காட்டு