Merry Chirstmas : வருடத்தின் இறுதியில் வெளியாகும் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம்!
தமிழில் முதன் முதலில் கத்ரீனா கைஃப் எண்ட்ரி கொடுக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பல துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.
தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய்பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும், இந்தியில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது
தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த திகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -