Vijay Goes Bangkok : தளபதி 68 படப்பிடிப்பிற்காக பேங்காக்கிற்கு பறந்து சென்ற விஜய்!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதில் பங்குபெற்ற பிரபலங்கள் பல சுவரஸ்யமான விஷயங்களை பற்றி பேசினர். விஜய்யின் குட்டி ஸ்டோரியும் வைரலாக பரவியது.

சில வாரங்களுக்கு முன்னர் லியோ படம் மீது எதிர்ப்பார்ப்பு இருந்த போதே, தளபதி 68 குறித்த அறிவிப்பு வந்து விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, யோகி பாபு, மீனாட்சி செளதிரி, அஜ்மல் அமீர், பிரேம் ஜி,வைபவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பிற்கு முந்தையை தயாரிப்பு பணிகளுக்காக வெங்கட் பிரபு, விஜய் லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர். டி ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டதால், இது டைம் ட்ராவல் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
படத்தின் பூஜையும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றுள்ளார் நடிகர் விஜய். விமான நிலையத்திற்கு இவர் வருகை தந்திருந்த போது, பலரும் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -