Vijay Deverakonda : வாய் விட்டு மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படம் தமிழகத்தில் மட்டும் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் வெளியானது.
முதல் நாள் ஓப்பனிங் மட்டுமே ரூ.20 கோடியை எட்டிய நிலையில் உலகளவில் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டது.
தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் குஷி பட ப்ரோமோஷன் கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் பேசுகையில், “தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த 6 படங்கள் தோல்வி தான். ஆனால் அவர் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அப்படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளது” என்று கூறினார்.
“தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் கடைசி 6,7 படங்கள் தோல்விதான் ஆனால் அவர் சினிமாவில் புரட்சி செய்தவர் அவரால் கிட்டதட்ட ஆயிரம் பேர் சினிமா உலகில் வந்துள்ளனர்” - விஜய் தேவரகொண்டா
“என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தாலும் இனி வரும் படங்களில் ஹிட் கொடுப்பேன்” என்றார் விஜய் தேவரகொண்டா. இவரின் பேச்சு ரஜினி மற்றும் சீரஞ்சிவி ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -