இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் வடிவேலு!
கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக அப்பகுதிகளில் இருந்த ஆறு ,ஏரி , குளங்கள் நிரம்பி தண்ணி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தமிழ் நாடு அரசும் அப்பகுதிகளில் இருக்கும் தன்னார்வ தொண்டர்களும் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர்.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்று உதவி செய்தனர்
இயக்குநர் மாரி செல்வராஜ் மக்களை மீட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி பேரிடர் பணியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் இணையத்தில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விவாதங்களில் இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சித்தது வரும் நபர்களுக்கு நடிகர் வடிவேலு கண்டனங்களை தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.