Kanguva 2nd Look : கங்குவா படத்தின் இரண்டாவது லுக் ரிலீஸ் - இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்!
நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி முதன் முறையாக இணைந்து கங்குவா படத்தை உருவாக்கி வருகின்றனர். பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிவருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை திஷா பதானி இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், மற்றொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட லுக் வெளியானது. அதில், “ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது. அரசன் வருகிறான்” என்ற கேப்ஷன் இடம்பெற்று இருந்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சூர்யா குதிரை மேல் அமர்ந்து வருவது போன்ற காட்சி அமைந்துள்ளது.
இதனிடையே கங்குவா படத்தில் வில்லனாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -