Kanguva Glimpse : நள்ளிரவு சரியாக 12:01 மணிக்கு.. க்ளிம்ப்ஸ் வீடியோவிற்கு காத்திருக்கும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூர்யாவின் 42ஆவது படமான இப்படத்தின் கதை பதினாறாம் நூற்றாண்டில் நடப்பது போலவும், ஃபேண்டஸி கதையாகவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் கூட முழுமையாக பகிராமல் படக்குழு பாதுகாத்து வந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.
அதன்படி, நாளை சூர்யா பிறந்தநாள் என்பதால், இன்று நள்ளிரவு 12:01 மணிக்கு இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து சூர்யா ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -