Suriya 47 Pooja Photos : சூர்யாவின் மாஸ்டர் ப்ளான்..மும்பையைத் தொடர்ந்து மலையாளத்தில் தயாரிப்பு நிறுவனம்
சூர்யாவின் 47 ஆவது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் 46 ஆவது படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிவருகிறார்
சூர்யாவின் 47 ஆவது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்க இருக்கிறார். இவர் முன்னதாக ரோமான்ச்சம் , ஆவேஷம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்
சுதா கொங்காரா இயக்கவிருந்து கைவிடப்பட்ட புறநாநூறு படத்தில் சூர்யாவும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்க இருந்தனர். தற்போது இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றன
பிரேமலு, லோகா ஆகிய படங்களில் நடித்த நஸ்லென் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் படங்களை தயாரித்து வருகிறது சூர்யாவின் 2D நிறுவனம் , அண்மையில் சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ப்ரோடக்ஷன்ஸ் தொடங்கினார். தனது 47 ஆவது படத்தை இந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் சூர்யா