Maaveeran : ‘வெயிட்டிங்லயே வெறி ஆகுதே..’ இன்று மாலை வெளியாகும் மாவீரன் அப்டேட் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திறைப்படத்தை தொடர்ந்து ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'மண்டேலா' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, டோலிவுட் நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முன்னதாக இப்படத்தின் பாடல் ’சீன்னா சீன்னா ஆனோமே சீன்னா’ வெளியாகி ரசிகர்களிடம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது
இந்நிலையில் மாவீரன் படக்குழு இன்று முக்கிய அப்டேட்டைமாலை 6 மணிக்கு வெளியிட போவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளனர்.
இந்த அப்டேட்டில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.