சிவகார்த்திகேயனின் வீட்டு வாசலில் வரிசைக்கட்டி நிற்கும் திரைப்படங்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த நடிக்கவிருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 21 திரைப்படம் அடுத்தவருடம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜயை வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிவா, அயலான் இரண்டாம் பாகத்தில் ரவிக்குமாரிடம் மீண்டும் இணைவார் என சொல்லப்படுகிறது.