12 years of Sivakarthikeyan : வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் நம்ம வீட்டு பையன் சிவாகார்த்திகேயன்!
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவகார்த்திகேயன்.
இவரின் எண்ணற்ற திறமைக்கான அங்கீகாரமாக பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு குறுகிய காலத்திலேயே முன்னுக்கு வந்தார்.
வெள்ளித்திரையில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவை பல சின்னத்திரை கலைஞர்களின் மனதில் வித்திட்டவர் இவர்தான்.
2012 ஆம் ஆண்டு வெளியான பாண்டிராஜின் மெரினா திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.
இவரின் நடிப்பும், இவர் தேர்ந்து எடுக்கும் படங்களும் இளைய தலைமுறையினரை கவர்ந்தது. அவர்களை தாண்டி குழந்தைகளுக்கும் இல்லத்தரிகளுக்கும் இவரை பிடிக்கும்.
நடிகராக மட்டும் தன் பயணத்தை தொடராமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் 12 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் பலர் அவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.