DD Returns : மீண்டும் ஒரு காமெடி பேய் படம்.. அதே ஃபார்முலாவை பின்பற்றும் சாண்டா!
ஆர்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானம் முழு நீள காமெடி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார்.
அதைதொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம், குலு குலு ஆகிய படங்களில் சீரியஸான கதாநாயகனாக நடித்துள்ளார்.
தற்போது இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கித்தில் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற காமெடி கலந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளார் சந்தானம். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகிவுள்ளது.
இப்படத்தில் நடிகை சுரபி, நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது