✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actor Santhanam: 'இனிமே இப்படி இல்லை..’ மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..குதூகலத்தில் ரசிகர்கள்!

சுபா துரை   |  19 Jul 2023 05:34 PM (IST)
1

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வருகிற 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2

இது தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இந்த படம் திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளியாகும்” என்று கூறினார்.

3

அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருக்கிறது. தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா, தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது” என்று பேசியுள்ளார் சந்தானம்.

4

மேலும் பேசிய சந்தானம், ”நகைச்சுவை நடிகராக இருந்த போது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். இதே போல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்று கூறினார்.

5

காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்துள்ளேன். இது தொடர்பாக நான் பதில் அளித்தால், காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள்” என நகைச்சுவையாகப் பதிலளித்தார் சந்தானம்.

6

இந்த தகவலை அறிந்த சந்தானம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actor Santhanam: 'இனிமே இப்படி இல்லை..’ மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..குதூகலத்தில் ரசிகர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.