HBD Samudhrakani : 'வாழ்க்கைக்கு படிப்பு அவசியம்தான் ஆனா படிப்பே வாழ்க்கை இல்லை'.. பிறந்தநாளை கொண்டாடும் சமுத்திரக்கனி!
சமுத்திரக்கனி, தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர், இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் உணர்ச்சி மிக்க வசனங்களை இங்கு காண்போம்.
இங்க இருக்குற எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு எவனும் எதுக்காகவும் வரமாட்டான் நம்மள நாமதான் காப்பாத்திக்கனும்.
வாழ்க்கைல ஒரு தடவை ஏமாறலாம் அதையே பழகிக்காத.
இந்த உலகத்துல ரெண்டே ரெண்டு பேர் மட்டும்தான் வாழ முடியும் ஒன்னு ஏமாத்துறவன் இன்னொன்னு ஏமாந்தே பழகி போனவன் என்னால ஏமாத்தவும் முடியாது ஏமாறவும் முடியாது.
கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா உன் வாழ்க்கைக்கு நீ முதலாளி மிஸ் பண்ணிட்ட இன்னொருத்தனோட வாழ்க்கைக்கு கடைசி வரைக்கும் நீ தொழிலாளி.
பெரிய பெரிய படிப்பாளிங்க எல்லாம் படிச்சது இவ்வளோதான்யா பிடிக்காதது எவ்வளவோ இருக்கு வாழ்க்கைக்கு படிப்பு அவசியம்தான் ஆனா படிப்பே வாழ்க்கை இல்லை.