Rana sonam controversy : வாய்விட்டு மாட்டிக்கொண்ட ராணா..இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்த சோனம் கபூர்!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள படம் கிங் ஆஃப் கோதா. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தின் ப்ரோமோஷன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராணா, துல்கருடன் ஹிந்தி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.
“துல்கர் மிகவும் பொறுமையானவர். ஏனென்றால் படப்பிடிப்பு நடுவே முன்னணி நடிகை ஒருவர் தனது கணவருடன் போனில் ஷாப்பிங் பற்றி பேசுவது மற்றும் வசனங்களை மறந்து பல டேக்குகள் வாங்குவதுமாக இருப்பார். ஆனால், துல்கர் மிக பொறுமையாக நடிப்பார்”என்றார் ராணா.
ராணா, நடிகை சோனம் கபூரை பற்றி பேசியிருக்கிறார் என்ற கருந்து இணையத்தில் பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் ராணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தத்துவம் ஒன்றை மேற்கோள்காட்டி,‘இந்த சின்ன விஷயத்தை சில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மற்றவர்களை பற்றி பேசும் போது..’என சோனம் கபூர் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானும் சோனம் கபூரும் தி ஸோயா பேக்டர் படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -