Rajinikanth Dropped Movies : டாப் இயக்குநர்களின் கதைக்கு நோ சொன்ன ரஜினி.. யார் யாருனு தெரியுமா?
தனது சினிமா வாழ்க்கையில் பல இயக்குநர்களுடன் பணி புரிந்த ரஜினிகாந்த எண்ணற்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில சமயங்களில் பாபா, லிங்கா போன்ற ப்ளாப் படங்களையும் கொடுத்துள்ளார். டாப் இயக்குநர்களின் படத்தை சில சமயங்களில் கைவிட்டதும் உண்டு. அது பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2004 ஆம் ஆண்டு ஜக்குபாய் எனும் படக்கதையை ரஜினிகாந்திடம், கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய், ராணி முக்கர்ஜி, ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர். அத்துடன் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருந்தார். அந்த சமயத்தில், சந்திரமுகி படத்தில் பிசியாகி விட்டார் ரஜினி. இப்படம் நீண்டு காலமாக தள்ளிக்கொண்டே போனது, பிறகு சரத்குமார், ஸ்ரேயா உள்ளிட்டோரை வைத்து படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.
அத்துடன் ராணா எனும் படத்தின் கதையையும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். ரஜினியின் திடீர் உடல் நல குறைவால் இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இதில் தீபகா படுகோன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
இன்று வரை வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார் வாய்ஸ் ஓவர் கெளதம் வாசுதேவ் மேனன். அனைத்தும் கைகூடிய வேளையில், கலைப்புலி எஸ் தாணு அப்படத்திலிருந்து விளகிய காரணத்தால் விக்ரமின் கையிற்கு சென்ற துருவ நட்சத்திரம்
தரமான படங்களை கொடுக்கும் தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன், ரஜினியிடம் கதை கூறியுள்ளார். 2018ல் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வெற்றிமாறன் கூறிய கதையை மறுத்த காரணத்தை விவரித்தார் ரஜினி. அப்படம் ஸ்ட்ராங்காக அரசியல் பேசும் கதையை கொண்டுள்ளதால், அதை தவிர்த்ததாக தெரிவித்தார் ரஜினி.
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், 12 ஆண்டுகளுக்கு முன்னர் பக்கிரி எனும் கதையை கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கருத்துகள் நிறைந்து காணப்பட்டதால் அதை ரஜினி கைவிட்டுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -