HBD prashanth : 90களின் கனவு நாயகன் பிரசாந்திற்கு இன்று பிறந்தநாள்!
நடிகர் பிரசாந்த் ஏப்ரல் 06 1973 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த் .நடிகர் பிரசாந்த் தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
பிரசாந்த் தனது 17வது வயதில் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தில் தோன்றி தனது திறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
'ஆணழகன்' என்ற படத்தில் பெண் வேடம் அணிந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘திருடா திருடா’படம் மூலம் 90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக மாறினார்
தனது திருமணத்தின் பின், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். பின்னர் 2011ல் கருணாநிதி எழுதிய ‘பொன்னர் சங்கர்’ என்ற படம் மூலம் ரீ-என் டரி கொடுத்தார். இருப்பினும், இது வெற்றி பெறவில்லை.
90ஸ் பெண்களின் கனவு நாயகனாகவும், காதல் அரசனாகவும் ஜொலித்த பிரசாந்த் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.